ராதாபுரத்தில் மணல் கடத்திய 4 பேர் கைது

ராதாபுரத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

ராதாபுரம் சப்-இன்ஸ் பெக்டர் வள்ளிநாயகம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பரமேஷ்வ புரத்தில் சட்டவிரோதமாக சிலர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 44), முத்துக்கிருஷ்ணன் (31), பங்கஜ்குமார் (18), முருகேஷ் (51) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் முன்னீர் பள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மருதக்குட்டி தலை¬யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது  அவ்வழியாக வந்த ஒரு லாரியை ஓட்டிவந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்து கீழே இறங்கி தப்பியோடினர். 

விசாரணையில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடி யவர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com