ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் கல்வி சுற்றுலா சென்ற தொடக்கப்பள்ளி மாணவர்கள்

ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் ஸ்ரீவைகுண்டம் குமர குருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றனர்.
கல்வி சுற்றுலா புறப்பட்டு சென்ற மாணவர்கள்.
கல்வி சுற்றுலா புறப்பட்டு சென்ற மாணவர்கள்.
Published on: 

செய்துங்கநல்லூர்:

ஸ்ரீவைகுண்டம் குமர குருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவ-&மாணவிகள் கல்வி சுற்றுலாவாக கன்னியாகுமரி மற்றும் முட்டம் பகுதிகளுக்கு சென்றனர். 

பழமை வாய்ந்த குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விச் சுற்றுலாவிற்கான போக்குவரத்திற்கு உதவிட வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியை ராணி, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் கேட்டுக்கொண்டார்.

உடனடியாக தனது சொந்த நிதியிலிருந்து மாணவ&மாணவிகள் கல்வி சுற்றுலாசென்று வருவதற்கான உதவிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. செய்தார். 

இதனை அடுத்து குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலாவாக கன்னியாகுமரி மற்றும் முட்டம் பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

X