தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர் நகராட்சி பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு

பா.ஜனதா கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர் வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தூத்துக்குடி:

அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த பா.ஜனதா கட்சி நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 

இந்நிலையில் இந்த தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.  வெளியிட்டுள்ளது. 

சென்னை உள்ளிட்ட 14 மாநகராட்சிகளுக்கும், நீலகிரி உள்ளிட்ட 12 நகராட்சி களுக்கும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். 

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் திருச்செந்தூர் நகராட்சிகளும் அடங்கும். 

தூத்துக்குடி மாநக ராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:- 

வார்டு 1-ஜெய லட்சுமி, 6- சங்கர்கணேஷ், 11- பேச்சியம்மாள், 16- பாலமுருகன், 18- செல்லப்பா, 19- முத்துமாரி, 24- ராதா, 28-சொர்ணபிரியா, 30- பூபதி (மான்சிங்), 31- வெங்கடேஷ், 34- மாரியப்பன், 35-பிரபு, 36- தங்கம், 39- உஷாதேவி, 50-வல்லிராஜ், 54- மாதவன், 55- அன்பழகன், 60- முனியசாமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல் திருச்செந்தூர் நகராட்சி வார்டு 1- நவ மணிகண்டன், 2- கிருஷ்ணன், 3- மாயாண்டி, 4- ஆனந்தன், 5- கார்த்தீசன், 7- சரவணன், 8- வசந்தி முத்துலெட்சுமி, 9-கணேசன், 11- ஜெயஆனந்த், 12- சந்தோஷ் குமார், 13- சரஸ்வதி, 14- முத்துமாரி மகாராஜன், 15-நெல்லையம்மாள், 18- வைரமுத்து, 19-செந்தில்குமார், 21-ராமச்சந்திரன், 22-கருப்பசாமி, 24-திலகரதி, 27-மேனகா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com