உடன்குடி பகுதியில் கொய்யா விளைச்சல் அமோகம்

பருவமழை நன்றாக பேய்ததால் தற்போது உடன்குடி பகுதியில் கொய்யா விளைச்சல் அமோகமாக உள்ளது.
உடன்குடி பகுதியில் சைக்கிளில் கொய்யா விற்பனை நடந்த காட்சி.
உடன்குடி பகுதியில் சைக்கிளில் கொய்யா விற்பனை நடந்த காட்சி.
Published on

உடன்குடி:

உடன்குடி வட்டாரபகுதியில் கொய்யாப்பழம் தற்போது அதிகமாக விளைகிறது. வீடுகளிலும், தோட்டங்களிலும் கொய்யாமரம் அதிகமாக உள்ளது.

இந்தஆண்டுபருவ மழை நன்றாக பெய்தது. அனைத்து குளங்கள் குட்டைகள் முழுமையாக நிரம்பியது. உவர்ப்பு நிலம் எல்லாம் நல்ல தண்ணீர் நிலமாக மாறியதால் கொய்யா மரங்களில் கொத்து கொத்தாய் காய்கள் காய்த்துள்ளன.

அனைத்து கொய்யாபழமும் பஜார் வீதிக்கு விற்பனை செய்ய வருகிறது. இதனால் உடன்குடி பஜார் மற்றும் சுற்றுபுற கிராம பகுதிகளில் தெருத்தெருவாக சென்று  பழத்தை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பழம் ஒரு கிலோ வரை எடையுள்ளது. மிக சிறியகொய்யா 50 கிராம் எடை உள்ளது. கொய்யாப்பழத்தை பலர் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com