பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
பிரதோஷ வழிபாடு நடந்தது.
பிரதோஷ வழிபாடு நடந்தது.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு பிரதோஷ விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிவராத்திரிக்கு பிறகு வரும் பங்குனி முதல் பிரதோஷ விழா சிறப்பானதாக கருதப்படுகிறது. பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோச விழாவில் நந்திபகவான் மற்றும் பிறவிமருந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நந்திபகவானை வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். 

சர்வாலய உழவார பணிக்குழு சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com