500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கம் - 5 பேர் கைது

திருவாரூரில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

திருவாரூர்:

திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருள் என்பவர் ரூ.500 கொடுத்து மதுபாட்டில் வாங்கியுள்ளார். 

அவர் கொடுத்த பணம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் திருவாரூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் அருளை பிடித்து விசாரித்ததில் அவர் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயற்சித்தது தெரிய வந்தது. 

இதையடுத்து அருளை கைது செய்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் புலிவலம் தமிழ்வாணன் (வயது 38), நாகை புதுச்சேரி கரிகாலன் (34), ஈஸ்வரன் (20)

 நாகை மேல வெண்மணி விஸ்வபாரதி (34) ஆகியோர் இந்த கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டதில் தொடர்புடையவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்து அவர்களையும் கைது செய்துள்ளனர். 

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் கள்ள-நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com