பெட்ரோல் பங்க் அமைக்க தாட்கோ மூலம் கடன் உதவி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பெட்ரோல் பங்க் அமைக்க தாட்கோ மூலம் கடன் உதவி
Published on

வேங்கிக்கால்:

பெட்ரோல் பங்க் அமைக்க தாட்கோ மூலம் கடன் உதவி வழங்கப்படும் என பா.முருகேஷ் தெரிவித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெட்ரோல் பங்க் அமைக்க தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.

பெட்ரோலிய நிறுவனத்தால் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு முதல் முறையாக வாங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை குறைந்த வட்டியில் தாட்கோ மூலம் கடன் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் தாட்கோ தலைமை அலுவலக திட்ட மேலாளரை 73584 89990 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com