மாநில அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுகண்ணமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்
மாநில அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலையில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் 19 வயதுக்குட்பட்ட உயரம் தாண்டுதலில் ராகுல், 400 மீ ஓட்டப்பந்தயத்தில் இளங்கோவன் ஆகியோர் முதலிடமும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கிஷோர் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் ராகுல், இளங்கோவன் ஆகிய இருவரும் மாநில அளவில் நடக்க உள்ள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாக உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார். அப்போது உடற்கல்வி ஆசிரியர் அன்புகுமரன் உடனிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com