அகல் விளக்குகள் விற்பனை அமோகம்

மண் மற்றும் பீங்கானால் ஆன அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ரூ. 1 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டது.
அகல் விளக்குகள் விற்பனை அமோகம்
Published on

அரூர், 

கார்த்திகை மாத பௌர்ணமி தீப திருநாளாக தமிழகத்தில் கொண்டா டப்படுகிறது. அன்றைய தினம் இந்துக்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுவர். வீட்டில் ஏற்கனவே அகல் விளக்குகள் இருந்தாலும் வருடத்திற்கு வருடம் புது விளக்குகளை வாங்குவர்.

இன்று கார்த்திகை தீபம் என்பதால அரூர் கடைவீதியில் சாலையோ ரங்களிலும், தள்ளுவ ண்டிகளில் வைத்தும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் மற்றும் பீங்கானால் ஆன அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

விநாயகர், துளசி மாடம், தாமரை பூ, உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் அழகான வண்ணங்களில் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகளை ஏராளமானோர் வாங்கி சென்றனர். அளவு மற்றும் வடிவத்தை பொறுத்து ஒரு அகல் விளக்கு ரூ. 1 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com