செல்லப்பன் பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

செல்லப்பன் பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.எதிரில் பழுதடைந்த மகளிர் பொது சுகாதார வளாகம் அமைந்துள்ளது.
செல்லப்பன் பேட்டை அரசு பள்ளி அருகே உள்ள பழுதான சுகாதார வளாகம்
செல்லப்பன் பேட்டை அரசு பள்ளி அருகே உள்ள பழுதான சுகாதார வளாகம்
Published on

பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள செல்லப்பன் பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தலைமை யாசிரியர் உள்ளிட்ட10 ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர்.

108 மாணவர்களும் 102 மாணவி களும் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி பிரதான கட்டிடத்தில் எதிரில் கைவிடப்பட்ட நிலையில் பழுதடைந்த மகளிர் பொது சுகாதார வளாகம் அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில் உள்ளே முட்செடிகள், புதர்கள் மண்டி காணப்படு கின்றன. இதனால் மாணவர்கள் அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது.

எனவே இந்த பழுதான சுகாதார வளாகத்தை இடித்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com