காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடையில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை

காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடைக்கு தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது. மற்ற கடைகளை விட விலை குறைவாக வழங்குவதாகவும் பல்வேறு புகார் வந்ததது.
காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள  செல்போன் கடையில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை
Published on

புதுச்சேரி:

காரைக்கால் திருநள்ளாறு சாலையில் பிரபல செல்போன் கடை. இயங்கி வருகிறது. இந்த செல்போன் கடைக்கு தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது. இந்த செல்போன் கடையில் உரிய கணக்கு மற்றும் வரி செலுத்தாமல் செல்போன்களை விற்பதாகவும், மற்ற கடைகளை விட விலை குறைவாக வழங்குவதாகவும் பல்வேறு புகார் வந்ததது. 

இதனை தொடர்ந்து புதுச்சேரி வணிகவரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர், கடையில் திடீரெ ன நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத செல்போன் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சுமார்6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை செய்து, சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள திருநள்ளாறு சாலை கடைவீதியில் வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com