

பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் துப்புரவு தொழிலாளர் நலச் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொழிலாளர்கள் தினத்தை நினைவு கூறும் விதமாகவும், மே தினத்தை கொண்டாடும் விதமாகவும் பதாகை வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை துப்புரவு தொழிலாளர் நலச்சங்கத்தின் ஒருங்கி–ணைப்பாளர் செல்வம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் சதாசிவக்குமார் மற்றும் ஆலயம் அறக்கட்ட–ளையின் நிர்வாகி ஏ.கே. குமார் உள்ளிட்ட சுமார் 150 -க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஈ.பி.எப் பிரிமியத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டும். முதல் நகர் மன்றக் கூட்டத் தொடரில் தினக்கூலி ரூ.429 என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தூய்மைப் பணியாளர்களின் சம்பளத்தை இந்த மாதத்தி–லிருந்து அவர்களுக்கு வழங்க வேண்டும்.
சுய உதவி குழு மூலம் இயங்கும் தூய்மை பணியாளர்களை படிப்படியாக அரசுப் பணியாளர்களாக பணி அமர்த்த வேண்டும், ஆள் பற்றாக்குறையை போக்க வேண்டும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பினார்கள்.
இதில் சுய உதவிக் குழுவின் பொறுப்பாளர்கள் அருண்குமார், பிரசன்னா, செல்வம், வினோத், அறிவு, நாடியம்மாள், நாகம்மாள், வெள்ளையம்மாள், நாடியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் குழு உறுப்பினர் சக்திவேல் நன்றி கூறினார்.