ராமசுவாமி கோவிலில் ராமநவமி பெருவிழா

கும்பகோணத்தில் நாயக்கர் கால அற்புத சிற்பங்களுடன் மிளிரும் ராமசுவாமி கோவிலில் ராமநவமி பெருவிழா ஏப்.2&ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
கும்பகோணம் இராமசுவாமி கோவில்
கும்பகோணம் இராமசுவாமி கோவில்
Published on: 

பட்டீஸ்வரம்:

சோழ வளநாடான தஞ்சை மாவட்ட காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள கோவில் மாநகரமான கும்பகோணம் மாநகரில் 500 வருடங்கள் கடந்தும் மிளிரும் நாயக்கர் கால அதி அற்புத சிற்பங்களை தன்னகத்தே கொண்ட தென்னக அயோத்தி என்றழைக்கப்படும் ராமசுவாமி கோவிலில் ராமநவமி பெருவிழா நாளை 1-ந்தேதி மாலை அனுக்ஞை, மிருத்சங்கிரஹணமும், தொடர்ந்து 2- ம் தேதி காலை 7 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தினசரி காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு மங்கள இன்னிசை முழங்க தாயார், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வண்ண மின் விளக்குகள் ஒளிர சூரியப்பிரபை, சேஷம், கருடர், அனுமந், யானை, கோரதம், புன்னைமரம், குதிரை ஆகிய வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.

 இவ்விழாவின் 4ம் திருநாள் இரவு ஓலை சப்பரத்தில் கருடசேவையும், ஒன்பதாம் திருநாள் (இராமநவமி) அன்று காலை 8-மணிக்கு திருத்தேரோட்டமும், இரவு தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது மேலும் 11-ம் தேதி சப்தாவர்ணமும், மறுநாள் 12-ம் தேதி விடையாற்றி விழாவும் நடைபெறும்.

இவ்விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் க.ஜெகந்நாதன் மற்றும் தக்கார், ஆய்வாளர் ம.ராஜகுரு மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com