தொழு நோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம்

ஒரத்தநாட்டில் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.
தொழுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கம்.
தொழுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கம்.
Published on

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு 

சிறப்பு விழிப்புணர்வு பணிகள் ஸ்பார்ஷ்- 2022 என்ற பெயரில் 

ஜனவரி 30-ந்தேதி முதல் பிப்ரவரி 13-ந்தேதி வரை நடைபெற்று வருகிறது.

ஒரத்தநாடு வட்டாரம் முழுவதும் ஸ்பார்ஷ் -2022 நிகழ்வாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார

நிலையங்கள் அனைத்திலும், தொழு நோய் ஒழிப்பு தின 

உறுதி மொழி ஏற்றல், தொழு நோய் விழிப்புணர்வு 

கூட்டங்கள் நடத்துதல், தொழு நோயால் பாதிக்கப்பட்டு 

உடல் ஊனமுற்ற நோயாளிகளை கவுரவப்படுத்துதல், 

ஊனமுற்ற பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு 

மாதாந்திர உதவி தொகை பெற்றுதருதல்.

பிற மாநிலத்தை சார்ந்த கூலித்தொழிலாளிகளுக்கும் 

தொழு நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், 

பள்ளி மாணவர்களுக்கு நலக்கல்வி வழங்குதல் மகளிர் 

சுய உதவிக் குழுக்கள், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட 

பணியாளர்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வை 

ஏற்படுத்துதல் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு 

சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று ஒரத்தநாடு வட்டம் கக்கரை 

கிராமத்தில் சாலை பணிகள் மேற்கொண்ட  ஜார்ஹண்ட் 

மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்களுக்கு, தொழுநோய் 

குறித்த விழிப்புணர்வு கல்வியும், பரிசோதனைகளும் 

மேற்கொள்ளப்பட்டது.

அதில் 20 வயது இளம் கட்டிட தொழிலாளி ஒருவருக்கு தொழுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை தொடங்கப்பட்டது.

இதன் இளம் வயதிலயே அவர் நிரந்தர ஊனம் அடைவது 

தவிர்க்கபட்டது. தொழுநோய் ஆரம்ப அறிகுறிகளான 

உணர்ச்சி அற்ற தேமல், கை கால் மரமரப்பு, நரம்புகளில் 

வலி முதலிய அறிகுறிகள் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை 

உடன் அணுகி இலவச சிகிச்சை மேற்கொள்ளலாம் 

என வலியுறுத்தப்பட்டது. 

மாவட்ட தொழுநோய் துணை இயக்குநர் குணசீலன் ஆணைப்படி, 

வட்டார மருத்துவ அலுவலர் இந்திரா வழிகாட்டுதல் படி 

ஒரத்தநாடு வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் 

சிவக்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com