தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட லயன் சங்க நிர்வாகி உடல்

இவர் இறப்பிற்கு பிறகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார். மேற்கண்ட தகவலை பி.எஸ்.டி. மற்றும் உறுப்பினர்கள், தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
லயன் சங்க நிர்வாகி துரைராசன் உடல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
லயன் சங்க நிர்வாகி துரைராசன் உடல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
Published on

தஞ்சாவூர்:

லயன்ஸ் இயக்கத்திற்கு என்று வாழ்ந்து தான் இறந்தும் பிறர் வாழ கண்களை மட்டுமல்ல, மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக தனது உடலையும் தானமாக கொடுத்த நல்லாசிரியர் லயன் துரைராசன் உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. அதற்கான சான்றிதழும் அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது.இவர் இறப்பிற்கு பிறகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார்.

இத்தனை கடினமான துயர நேரத்திலும், அவரின் மனைவியும், பிள்ளைகளும் துரைராசனின் கடைசி ஆசைகளை" (கண் தானம், உடல் தானம்) முழுவதும் நிறைவேற்றிட உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவலை பி.எஸ்.டி. மற்றும் உறுப்பினர்கள், தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com