திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்

பாபநாசத்தில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிட கழக்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிட கழக்தினர்.
Published on

பாபநாசம்:

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை நினைவூட்டும் தமிழக அரசின் ஊர்திகளை அனுமதிக்காத மத்திய அரசை கண்டித்து பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 பாபநாசம் நகர தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், பாபநாசம் நகர செயலாளர் வீரமணி, பாபநாசம் ஒன்றிய துணை செயலாளர் ஜனார்த்தன், நகர துணை செயலாளர் நாகராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் பாபநாசம் ஒன்றிய துணை செயலாளர் 

பசுபதி வளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஒன்றியக்குழு உறுப்பினர் இளங்கோவன்.

ஓய்வு பெற்ற கருவூலத்துறை அதிகாரி அன்பழகன், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com