செங்கோட்டை பகுதியில் சுமங்கலி நோன்பு

செங்கோட்டை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இறுதியில் பெண்கள் சுமங்கலி நோன்பு கடைபிடித்து வருகிறார்கள்.
செங்கோட்டை பகுதியில் சுமங்கலி நோன்பு நடைபெற்ற போது எடுத்தப்படம்.
செங்கோட்டை பகுதியில் சுமங்கலி நோன்பு நடைபெற்ற போது எடுத்தப்படம்.
Published on

செங்கோட்டை:

இந்து பெண்கள் காரடையான் (சுமங்கலி) நோன்பு என்கிற விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இறுதியில் பங்குனி மாதம் பிறப்பையொட்டி கடைபிடித்து கொண்டாடி மகிழ்ந்து வருவது வழக்கம். 

இந்த நோன்பில் திருமணமான பெண்கள் தங்களின் கணவர் ஆயுள் கூடவும், நோய் நொடியின்றி வாழவும், திருமணமாகாத கன்னியர்கள் விரைவில் திருமணம் நடக்கவும், தங்களுக்கு நல்ல கணவர்மார்கள் கிடைத்திடவும் அம்மனை நினைத்து விரதமிருந்து வணங்கி மஞ்சள் சரடு அணிந்து கொள்வது வழக்கம். 

இந்நிலையில் செங்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு காரடையான் நோன்பு இரவு 11.15 மணிக்கு மேல் தொடங்கி 11.45 மணிக்குள் முடிவடைவதையொட்டி கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பக்தியுடன் பூஜித்தனர். இந்த பூஜையை மேற்கொள்வதின் மூலம் ஒவ்வொரு நாளும் கணவன்- மனைவி பிரிவு வராது. 

மேலும் கணவர் ஆயுள் நீடிக்கும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை என்பதால் காரடையான் நோன்பு திருமணமான பெண் களுக்கும், திருமணமாகாத பெண்களுக்கும் ஒரு வரப்பிரசாத என்னி ஆண்டாண்டு காலமாக கடைபிடித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com