

தென்காசி:
தென்காசி மாவட்ட தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராசேந்திரன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பேசும்போது கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி
கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். நாம் இணைந்து நடத்திய பல்வேறு போராட்டங்கள் மூலம் பல்வேறு வெற்றி களைபெற்றுள்ளோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம்.
அதைப்போலவே விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தென்காசி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற வேண்டும்.
அதற்கு தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.