இளநிலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பொறியியல் மாணவர் சேர்க்கை
பொறியியல் மாணவர் சேர்க்கை
Published on

சென்னை:

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட உள்ளது. இதனை https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரி மூலம் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் அல்லது பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும்.

இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண்(ரேண்டம் எண்) ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com