முன்னாள் அமைச்சர் காமராஜின் நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகிலுள்ள பிளாசம் ஓட்டலிலும் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜின் நண்பரான இளமுருகு என்பவர் இந்த ஓட்டலை நடத்தி வருகிறார்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் காமராஜின் நண்பரான இளமுருகு என்பவருக்கு சொந்தமான ஓட்டல்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் காமராஜின் நண்பரான இளமுருகு என்பவருக்கு சொந்தமான ஓட்டல்.
Published on
திருச்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் கே.கே.நகரில் உள்ள தொழிலதிபர் பாண்டியன் மற்றும் தில்லைநகரில் உள்ள இளமுருகு ஆகியோரது வீடுகளை படத்தில் காணலாம்.

திருச்சி கே.கே.நகர் ஐயர் தோட்டம், 2-வது மெயின் ரோடு, 3-வது கிராஸ் பகுதியில் உள்ள காமராஜின் நண்பர் பாண்டியன் (53) என்பவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஆறு பேர் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

தொழிலதிபரான பாண்டியன் பூதலூரில் அரிசி ஆலை, திருச்சி மாத்தூரில் இன்டஸ்ட்ரீஸ் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகிலுள்ள பிளாசம் ஓட்டலிலும் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜின் நண்பரான இளமுருகு என்பவர் இந்த ஓட்டலை நடத்தி வருகிறார். அதிரடியாக ஓட்டலில் நுழைந்த போலீசார் அங்கிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, சோதனையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

மேலும் திருச்சி தில்லைநகர் 7-வது கிராஸ் ராமச்சந்திரா நகர் பகுதியில் உள்ள இளமுருகு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் மொத்தம் 3 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com