அண்ணாநகர், அடையாறு உள்பட சென்னையில் 6 இடங்களில் போலீசார் அதிரடி வேட்டை

அடையாறு சாஸ்திரி நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள முத்துலட்சுமி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.மயிலாப்பூர்-ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஜி.பி.ஏ. கட்டுமான நிறுவனத்திலும், போயஸ் கார்டன் பகுதியில் ஜெயா டி.வி. அலுவலகத்தின் அருகில் உள்ள பி.எஸ்.கே. கட்டுமான நிறுவன அதிபர் அருண் குமார் இல்லத்திலும் சோதனை நடந்துள்ளது.
அண்ணாநகர், அடையாறு உள்பட சென்னையில் 6 இடங்களில் போலீசார் அதிரடி வேட்டை
Published on

முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர் பாண்டியன் சாலையில் உள்ள ஆர்.கே.இன்டர்நேஷனல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலையில் இருந்தே சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அடையாறு சாஸ்திரி நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள முத்துலட்சுமி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மயிலாப்பூர்-ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஜி.பி.ஏ. கட்டுமான நிறுவனத்திலும், போயஸ் கார்டன் பகுதியில் ஜெயா டி.வி. அலுவலகத்தின் அருகில் உள்ள பி.எஸ்.கே. கட்டுமான நிறுவன அதிபர் அருண் குமார் இல்லத்திலும் சோதனை நடந்துள்ளது.

சென்னை அண்ணாநகர் மேற்கில் எச்.பிளாக் பகுதியில் அமைந்துள்ள "எனர்ஜி சொலுசன் பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தின் தேசபந்து இல்லத்திலும், பனையூர் மாடர்ன் பில்டர்ஸ் லே-அவுட்டில் உள்ள முத்து லட்சுமி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com