சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீண்டும் சேலம் சிறையில் அடைப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
மீசை மாதவன்
மீசை மாதவன்
Published on

சேலம்:

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் (வயது73). ஆயுள் தண்டனை பெற்ற சேலம் மத்திய சிறையில் உள்ள டவர் பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.

வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தார். கடந்த ஜனவரி 9-ந் தேதி மாதையனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து சிறை அலுவலர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த நிலையில், அவருக்கு உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து மீண்டும் சேலம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com