தந்தை, மகன் மீது தாக்குதல்- சிறுவன் உள்பட 3 பேர் கைது

விருதுநகர் அருகே தந்தை, மகனை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள சத்திர ரெட்டிய பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.

சம்பவத்தன்று வீரபத்திரன் தனது மகன் முத்துக்கருப்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ண மூர்த்தியின் 17 வயது மகன் மற்றும் சத்யராஜ் (29), முத்தையா (27), பாண்டி ஆகிய 4 பேர் வழிமறித்து வீரபத்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த 4 பேரும் வீரபத்திரன், அவரது மகன் முத்துக்கருப்பனை சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து வச்சகாரபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகனை தாக்கிய 17 வயது சிறுவன் மற்றும் சத்யராஜ், முத்தையா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com