ஓமன் நாட்டின் மசூதிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன் ஓமன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.சமூகவலைதளத்தில் அவரை பலர் பாராட்டி உள்ளனர்.
ஓமன் நாட்டின் மசூதிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற தமிழச்சி தங்கபாண்டியன்
Published on

சென்னை :

தென்சென்னை பாராளுமன்ற தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஓமன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய மசூதியான சுல்தான் காபூஸ் மசூதிக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடை அணிந்து தமிழச்சி தங்கபாண்டியன் சென்றார்.

ஹிஜாப் உடையுடன் அவர் மசூதிக்கு சென்றதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஹிஜாப் உடை அணிந்து சிரித்தபடி இருக்கும் புகைப்படத்துடன் கூடிய அவரது பதிவை பலர் வரவேற்று தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.

சாதி, மதம், இனம் பார்க்காத தமிழ் திராவிட பெண் தமிழச்சி தங்கபாண்டியன் என அவரை பலர் பாராட்டி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com