தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு இருப்பது மிகுந்த அதிருப்தியை தருகிறது என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து சமூக வலைதளத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு இருப்பது மிகுந்த அதிருப்தியை தருகிறது. இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய மந்திரி ஜெய்சங்கர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com