சொத்து வரி உயர்வை கண்டித்து விக்கிரவாண்டியில் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி பஸ் நிலையத்தின் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பி பேசினார்.
அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Published on

விக்கிரவாண்டி:

விழுப்புரம் கிழக்கு  மாவட்ட அ.ம.மு.க. சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து தெருமுனை ஆர்ப்பாட்டம் நடந்தது. விக்கிரவாண்டி பஸ் நிலையத்தின் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பி பேசினார்.

அமைப்பு செயலாளர் கணபதி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமார், தலைமை கழக பேச்சாளர் டேவிட் பிரவின்குமார், மாவட்ட தலைவர் சந்திரசேகரன், துணை செயலாளர் முருகன், இணை செயலாளர் பொக்கிஷம், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யனார், அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள்  விக்கிரவாண்டி தமிழ்செம்மல், கோதண்டபாணி, காணை ரமேஷ், கிளியனுார்  ரங்கநாதன், கண்டமங்கலம் ரமேஷ், வானுார் கதிர்வேல், நகர நிர்வாகிகள் வெங்கடாசலம், பிச்சைமுகமது  உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com