மெட்ரோ ரெயில் நிலையங்களில் தனியார் அலுவலகங்கள், ஸ்டால்கள்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள காலி இடங்களில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் வர்த்தக அலுவலகங்கள் மற்றும் ‘ஸ்டால்கள்’ வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நந்தனம் மெட்ரோ நுழைவுவாயில்
நந்தனம் மெட்ரோ நுழைவுவாயில்
Published on: 

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணியர் பயன்பாட்டுக்கான இடத்தை தவிர்த்து, காலியாக உள்ள இடங்களை ஒப்பந்த அடிப்படையில், தனியாருக்கு வாடகைக்கு விட்டு, அதன் வாயிலாக வருவாய் ஈட்ட, மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி விமான நிலையம், ஆலந்தூர், அசோக் பில்லர், வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், செனாய் நகர் உள்ளிட்ட நிலையங்களில், ஸ்டால்கள், அலுவலகங்கள் வைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட உள்ளது.

அதேபோல் பச்சையப்பன் கல்லூரி, கீழ்பாக்கம், எழும்பூர், சென்னை சென்ட்ரல், சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். நிலையங்களிலும் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிலையங்களில் உள்ள காலி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு பெற, விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மற்ற நிலையங்களில் ஒப்பந்ததாரர்கள் இடவசதி கோரினால், ஆலோசித்து முடிவு எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com