பாதிப்பு 78 ஆக உயர்வு- ஐ.ஐ.டி.யில் மேலும் 18 பேருக்கு கொரோனா

சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்ததை அடுத்து அங்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகளுக்கு தொற்று பரவியது. இதையடுத்து அங்கு சுகாதார தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 5 பேருக்கு மேலும் உறுதியாகி 60 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் 18 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 78 ஆக உயர்ந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுவரையில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com