திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக மணப்பாறையில் 32.40 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக மணப்பாறையில் 32.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பகலில் சாரலுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழையில் குடைபிடித்தபடி சென்றவர்களை படத்தில் காணலாம்.
பகலில் சாரலுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழையில் குடைபிடித்தபடி சென்றவர்களை படத்தில் காணலாம்.
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று திருச்சியில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து காலை 9 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை விட்டு, விட்டு பெய்தது. அதேநேரத்தில் திடீர், திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ்நிலையம், மன்னார்புரம், திருவெறும்பூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் ஓடியது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது.

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கல்லக்குடி 6.20, லால்குடி 4.20, நந்தியர் தலை 2.60, புள்ளம்பாடி 7.40, தேவி மங்கலம் 1, சமயபுரம் 7.40, சிறுகுடி 3, வாத்தலை 1.20, மணப்பாறை 32.40, பொன்னணியார் 17.40, கோவில்பட்டி 15.20, மருங்காபுரி 10.20, முசிறி 2, புலிவலம் 9, நவலூர் கொட்டபட்டு 6, துவாக்குடி 20, கொப்பம்பட்டி 12, தென்பரநாடு 9, துறையூர் 7, பொன்மலை 4.80, திருச்சி ஏர்போர்ட் 7.60, திருச்சி ஜங்ஷன் 3.20.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 188.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 7.87 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான உன்னியூர், பெரிய பள்ளிபாளையம், சின்ன பள்ளிபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், தவிட்டுபாளையம், மஞ்சமேடு, எம்.களத்தூர், ஏழூர்பட்டி, காடுவெட்டி, மேய்க்கல் நாயக்கன்பட்டி, சேர்வைகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது.

உப்பிலியபுரம் அருகே கோட்டப்பாளையத்தில் சம்பா பருவத்தின் முற்பகுதியில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் விளைச்சலுக்கு தயாராகி உள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் இந்த பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com