

மொத்தம் 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
5 நாட்களில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியான விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.