கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற அழைப்பு

2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, எதிர் வரும் 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பம்
விண்ணப்பம்
Published on

கடலூர்:

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ.1லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, எதிர் வரும் 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.15 வயது 35 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1 ந்தேதி 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2022 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதி ஆண்டில் ( 202122 ) அதாவது 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். ( சான்று இணைக்கப்பட வேண்டும்)

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனையில் கணக்கிற் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 10.05.2022 அன்று மாலை 4.00 மணி ஆகும்.

விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்பித்தல் வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com