தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது - போலீஸ் தீவிர கண்காணிப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இரவுநேர ஊரடங்கு
இரவுநேர ஊரடங்கு
Published on

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர். 

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு இன்று இரவு 10 மணிக்கு அமலுக்கு வந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊரடங்கு அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com