திருத்தணி கோவில்
உள்ளூர் செய்திகள்
திருத்தணி கோவிலில் பணிபுரியும் 12 ஊழியர்களுக்கு கொரோனா
திருத்தணி கோவிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். டாக்டர்களின் ஆலோசனைப்படி 12 ஊழியர்களும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
திருத்தணி:
திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டியல் எண்ணிக்கையில் பங்கேற்ற உதவி ஆணையர் ரமணிக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட 118 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில் கோயில் பணியாளர்கள் கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை மேற்கொண்டனர்,இதில் கோயில் பணியாளர்கள் 12 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். டாக்டர்களின் ஆலோசனைப்படி 12 ஊழியர்களும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...காசி விஸ்வநாதர் கோவில் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு

