

திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பகுதியில் அரிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்வதாக தனியார் தொண்டு நிறுவனம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து திருவள்ளூர் வடக்கு வனச்சரக அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில் வனக்காவலர்கள் கடம்பத்தூர் சுற்றுப்புற பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு இடத்தில் அரியவகை பறவைகளை கொன்று விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. வனத்துறை அதிகாரிகள் வருவது பற்றி அறிந்ததும் பறைவைகளை வேட்டையாடி கொன்ற கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அங்கு கொன்று விறபனைக்கு வைக்கப்பட்டு இருந்த அரியவகையான காமன் கூட், இந்தியன் மார்கன், நார்தன் பின்டேல், காட்டன் பிக்மி கூஸ் இனத்தைச் சேர்ந்த 30 பறவைகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.
பறவைகளின் உடல்களை திருவள்ளூர் மாவட்ட கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் அந்தப் பறவைகள் அனைத்தையும் புதைத்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, இங்கு கைப்பற்றப்பட்ட பறவைகள் அனைத்தும் அரியவகையானது. இவை திருவள்ளூர் பகுதியில் கிடையாது. வேறு எங்கோ பறவைகளை பிடித்து கொன்று விற்பனைக்காக மர்ம கும்பல் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.