கோவிலுக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு- போலீசார் விசாரணை

மொடக்குறிச்சி அருகே கோவிலுக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

ஈரோடு:

மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி செல்வமணி (வயது 62). நேற்று மாலை இவர் தனது வீட்டில் இருந்து 46 புதூர் அருகே உள்ள தீரன்நகர் சாய்பாபா கோவிலுக்கு நடந்து சென்றார்.

அப்போது அந்த மூதாட்டிக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ரிங் ரோடு அருகே செல்வமணி நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் திடீரென செல்வமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மூதாட்டி திருடன்.. திருடன் என கத்தினார். அதற்குள் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். செயின் பறிப்பு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com