search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக அளவிலான தடகள போட்டியில் மத்தூர் குணாமெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் குண. வசந்தரசு பாராட்டிய காட்சி.

    சரக அளவிலான தடகள போட்டியில் மத்தூர் குணாமெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

    • சரக அளவிலான தடகள போட்டியில் மத்தூர் குணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றி மாணவர்களை அனைவரும் பாராட்டினர்

    சரக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மத்தூர் குணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்த கொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத் துள்ளனர்.

    இதில் மாணவர்க ளுக்கான கால் பந்து போட்டியில் U14 மற்றும் U17 இரண்டு அணிகளும், மாணவர்கள் பந்து வீச்சு போட்டியில் U17 மற்றும் U19 இரு அணிகளும் சரக அளவில் முதலிடமும், U19 மாண விகள் இரண்ட்டா மிடமும் பிடித்தனர்.

    மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் U14 மற்றும் U17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

    மாணவிகளுக்கான கோ -கோ போட்டியில் U14 அணிஇரண்டாம் இடம்பிடித்தனர். சரக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் என 17 பதக்கங்களை மாணவ மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் குண. வசந்தரசு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

    உடன் பள்ளியின் முதல்வர் இரவிந்திரன், உடற்கல்வி ஆசிரியர் செந்த மிழ் மற்றும் இருபால் ஆசிரி யர் பெருமக்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி களை வாழ்த்தினர்.

    Next Story
    ×