கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

முத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையையொட்டி பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com