சிறப்பு கட்டண ரெயில் சேவை மேலும் 1 மாதம் நீட்டிப்பு

சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக வருகிற பிப்ரவரி 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் இயக்கப்படும்.மறுமார்க்கமாக வருகிற பிப்ரவரி 5,12,19 மற்றும் 26-ந் தேதிகளில் இயக்கப்படும்.
சிறப்பு கட்டண ரெயில் சேவை மேலும் 1 மாதம் நீட்டிப்பு
Published on

தஞ்சாவூர்:

தெற்கு ரெயில்வே வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

எர்ணாகுளம் -வேளாங்கண்ணி (வண்டி எண்:06035) இடையே மதியம் 1.10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக (4 சேவைகள்) வருகிற பிப்ரவரி 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் (சனிக்கிழமைகள்) இயக்கப்படும்.மறுமார்க்கமாக வேளாங்கண்ணி-எர்ணாகுளம் (06036) இடையே மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக (4 சேவைகள்) வருகிற பிப்ரவரி 5,12,19 மற்றும் 26-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) இயக்கப்படும்.

இதுவரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு கட்டண ரெயில் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com