பழனி கோவில்களில் சிவராத்திரி வழிபாடு

பழனி கோவில்களில் சிவராத்திரி பூஜைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பழனி:

பழனி அருகே கோதைமங்கலத்தில் பெரியாவுடையார் கோவில் உள்ளது. இக்கோவில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலாகும். நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு 8 மணிக்கு முதல் கால பூஜையும், 11 மணிக்கு 2ம் கால பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு 3ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4ம் கால பூஜையும் நடைபெற உள்ளது.

இந்த பூஜைகளில் 16 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து பஞ்ச கவ்யம், சிவப்பு பட்டுடன் வில்வமாலை அலங்காரம், பாயசன்னம் நெய்வேத்தியம், பஞ்சாமிர்த அபிஷேகம், மஞ்சள் பட்டுடன் மல்லிகை மாலை அலங்காரம், கல்கண்டு பொங்கல் நெய்வேத்தியம், பழச்சாரு அபிஷேகம், வெண்பட்டுடன் வில்வ இலை மாலை அலங்காரம், எள்ளு வெல்லம் கலந்த அன்னம் நெய்வேத்தியம், சந்தனக்குழம்பு அபிஷேகம், நீலப்பட்டுடன் நொச்சி பத்ரம் மாலை அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

மேலும் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதே போல மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், ஆயக்குடி சோழீஸ்வரர் கோவில், கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோவில், கீரனூர் வாகீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com