கருணாநிதி பிறந்த நாள் விழா

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதி களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை தி.மு.க.வினர்  கொண்டாடினர். 

திருப்புவனத்தில் நடந்த   பிறந்த நாள் விழாவில்  கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.  

நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி  தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நாகூர்கனி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மானாமதுரை நகரில் தி.மு.க.வினர் ஊர்வலமாக  சென்று பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி  படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.   பொதுமக்களுக்கு இனிப்பு  வழங்கப்பட்டது. 

இதில் மானாமதுரை நகர்மன்ற  தலைவர் மாரியப்பன்கென்னடி,  ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் பாலசுந்தரம்,   கவுன்சிலர்  சதீஷ்குமார் உள்ளிட்ட  நிர்வாகிகள்,ந கராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மானாமதுரை   அண்ணா சிலை பகுதியில் கருணாநிதி படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மலர் தூவி கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினார்.  இளையான்குடி ஒன்றியம்  தாயமங்கலம்  கிராமத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

அங்கு வசிக்கும் நரிகுறவர் இனமக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  பல கிராம ங்களில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு   கொடி  ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு-நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க  தலைவர் சுப. தமிழரசன், மாநில மாற்றுதிறனாளிகள் நலவாரிய உறுப்பினர் புஷ்ப ராஜ்,  சிப்காட் காளியப்பன், தாயமங்கலம் தி.மு.க.  செயலாளர்  சக்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com