search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
    X

    வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    சீர்காழி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

    • பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727 உள்ளனர்.
    • இந்த வாக்காளர் பட்டியல் அங்கிகரிக்கப்பட்ட அனைத்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    சீர்காழி சட்டமன்ற தொகுதியில் (தனி) ஆண் வாக்காளர்கள் 120559, பெண் வாக்காளர்கள் 122424, திருநங்கைகள் 8 என மொத்தம் 242991, பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727, திருநங்கை 3 என மொத்தம் 264409 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனை த்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,ம ண்டல துணை வட்டாட்சியர் பாபு, அ.தி.மு.க சார்பில் சுரேஷ்குமார், வக்கீல் தியாகராஜன், தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், நெடுஞ்செ ழியன், சரவணன், காங்கிரஸ் கட்சி சார்பில் மோராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயரெங்கன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×