பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில்சிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

பரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைர வருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர், பரமத்திவேலூர் தேரடி வீதியில் வல்லப விநாயகர் கோவிலில் மகா காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர், பரமத்திவேலூர் தேரடி வீதியில் வல்லப விநாயகர் கோவிலில் மகா காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைர வருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் பரமத்தி வேலூர் தேரடி வீதியில் வல்லப விநாயகர் ஆல யத்தில் உள்ள மகா கால பைரவருக்கு மாசி மாத தேய்பிறை அஷ்டமியினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் நன்செய் இடையாறில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரை அத்துர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com