மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் இடம் மாற்றம்

நாமக்கல் மின் பகிர்மான வட்டம், பரமத்தி வேலூர் கோட்டம், கபிலர்மலை உட்கோட்டத்திற்குட்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் செயல்பட உள்ளது.
மின்வாரிய  உதவி பொறியாளர் அலுவலகங்கள் இடம் மாற்றம்
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மின் பகிர்மான வட்டம், பரமத்தி வேலூர் கோட்டம், கபிலர்மலை உட்கோட்டத்திற்குட்பட்ட பரமத்தி உதவி பொறியாளர் அலுவலகம் தற்போது பரமத்தியிலிருந்து கபிலர் மலைசெல்லும் சாலையில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக இன்று(சனிக்கிழமை) முதல் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் செயல்பட உள்ளது.

அதேபோல் கபிலர்மலை உதவி பொறியாளர் அலுவ லகம் தற்போது இயங்கி வரும் கட்டிடத்திலிருந்து கபிலர்மலையில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கபிலர்மலை துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும். எனவே பொதுமக்கள் இந்த அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com