கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா பொறுப்பேற்பு

ஷர்மிளாவுக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா பொறுப்பேற்பு
Published on

கோவை,

தமிழகம் முழுவதும் அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்ய தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வந்த ஷர்மிளா கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட வருவாய் அலுவராக பதவி வகதித்து வந்த லீலா அலெக்ஸ் சென்னை வெளிவட்ட சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com