கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய அய்யர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலார் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com