உப்பு உற்பத்தியாளர்கள் இணைய பொதுக்குழு கூட்டம்

வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் வரவு, செலவு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உப்பு உற்பத்தியாளர்கள் இணைய பொதுக்குழு கூட்டம் நடந்தது.
உப்பு உற்பத்தியாளர்கள் இணைய பொதுக்குழு கூட்டம் நடந்தது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய பொதுக்குழு கூட்டம் இணைய தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் செயலாளர் செந்தில், பொருளாளர் தென்னரசு, உப்பு உற்பத்தியாளர்கள் கேடிலியப்பன், சுப்பிரமணியன், அம்பிகாதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டு வரவு, செலவு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும், பொது நிதி கணக்கில் வருவாய் குறைந்த காரணத்தினாலும், விலைவாசி ஏற்றத்தினாலும் உப்பள பகுதிகளில் உப்பு ஏற்றும் லாரி ஒன்றுக்கு கட்டணமாக வசூல் தொகை ரூ.40-ல் இருந்து ரூ.70ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com