சேலம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த தொழிலாளி கைது

சேலம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்யப்பட்டார்.
.
.
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டிகேட் மூணாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்  (வயது 40). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று இவர் மூணாங்கரடு பகுதியில் நடுரோட்டில் நின்று கொண்டு அந்த பகுதியில் வந்து, சென்ற வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும்  பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர்  ஜாமீனில்  விடுவிக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com