ஸ்டவ் வெடித்து சிறுமி தீக்காயம்

சேலம் குகை அருந்ததியர் தெருவில் ஸ்டவ் வெடித்து சிறுமி தீக்காயடைந்தார்.
.
.
Published on

சேலம்:

சேலம் குகை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பிரபு இவரது மகள் பூவிழி (வயது 17). 

 இவர் நேற்று இரவு 9.30 மணி அளவில் தனது பாட்டி  வீட்டில் மண்எண்ணை  ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஸ்டவ்  வெடித்தது. 

இதில் உடலில் மண்எண்ணை கொட்டி தீ பிடித்தது.  பூவிழியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com