மேச்சேரியில் இளம்பெண்ணை அடித்து உதைத்த உறவினர்கள் கைது

மேச்சேரியில் சொத்து தகராறில் இளம்பெண்ணை அடித்து உதைத்த உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.
.
.
Published on

மேட்டூர்:

மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விஜய். இவரது மனைவி கோகிலா, ( வயது 29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் இறந்து விட்டார். இதனால் தனது கணவரின் சொத்துக்களை கேட்டு அவருடைய மனைவி கோகிலா மாமனார் சின்னத்தம்பிக்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த  சின்னத்தம்பியின் உறவினர்கள் ஆனந்தராஜ் (28), சிவராஜ் (26), சுதா(26), மயிலி (47) ஆகியோர் கோகிலாவை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த கோகிலா ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின்பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதிலியை கைது செய்தனர். மேலும் 3 பேரை  போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com