சேலத்தில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து

சேலத்தில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ பிடித்தது.
.
.
Published on

சேலம்:

சேலம் அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் அருகே உள்ள மேற்கு தெரு  பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 37).  இரவு இவரது வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி (பிரிட்ஜ்) மின் கசிவு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் வீட்டிலிருந்த பொருட்களில் தீப்பிடிக்க தொடங்கியது. 

உடனடியாக இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக தீயை அணைத்தனர்.

இதனால் தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் உடனடியாக தடுக்கப்பட்டது. மேலும் தீ விபத்திற்குக்கான  காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com